தமிழரிடையே கோலம் என வழங்கப்படும் கலையுடன் உள்ள தொடர்பு காரணமாகவும், முக்கிய வேறுபாடாக நிறம் இருப்பதாலும், இதை நிறக்கோலம் அல்லது வண்ணக்கோலம் எனலாம். இந்தி மொழியில் இதனை "ரங்கோலி" என்பர். இது ரங், ஆவலி என்னும் இரு சமசுக்கிருதச் சொற்களின் இணைப்பால் உருவானது. இங்கே ரங் என்பது நிறம் என்னும் பொருளையும், ஆவலி என்பது வரிசை அல்லது கொடி என்னும் பொருளையும் தருவன. தமிழ்நாட்டுக் கோலத்தையும் ரங்கோலி என்பதற்குள் அடக்கும் வழக்கமும் உண்டு.
No comments:
Post a Comment